இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடன இயக்குனர் ரகேஷ். 2011ம் ஆண்டு 'அவ்வா' என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன்பிறகு பிரபாஸ், மகேஷ்பாபு, வெங்கடேஷ் ராம் பொத்தனேனி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். ரியாலிட்டி ஷோக்களில் நடுவாராக இருந்தார். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் இன்றி சிரமப்பட்டர். நடன பள்ளியை நடத்தினார்.
53 வயதான ரகேஷ் சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஐதராபாத் திரும்பிய அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அதன் தீவிரம் அதிகமாக திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.




