
தி கேரள ஸ்டோரி படத்துக்கு ஏ சான்றிதழ்: பத்து காட்சிகள் நீக்கம்
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்த படத்தில் இதுபோன்று 32 ஆயிரம் பெண்கள் இந்த வலையில் சிக்கி உள்ளனர் என்றும் ஒரு தகவல் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. படத்தை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
அதே சமயம் இந்த படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் "ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் படத்தில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 10 காட்சிகளை நீக்கும்படியும் உத்தரவிட்டுள்ளனர். அதே சமயம் கேரளாவில் இந்த படத்தை திரையிட எழுந்துள்ள எதிர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்திளும் அதே போன்று எதிர்ப்பு எழுந்துள்ளதால் இந்த படம் தமிழகத்தில் திரையிடப்படமா என்பது தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!