3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? | ரஜினியுடன் நடிக்கும்போது இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டி இருந்தது ; நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு | விஜய்சேதுபதி குறித்து சிலாகிக்கும் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் | பிளாஷ்பேக்: “அரசகட்டளை” என பெயர் மாற்றமான எம் ஜி ஆரின் “பவானி” | இதயக்கனி, முத்து, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம் | நான் தயாரித்த படங்களால் நஷ்டம் : முதல் முறையாக மனம் திறந்த விஜய்சேதுபதி | சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பட டீசர் நாளை மறுநாள் ரிலீஸ் | பேச்சுத்துணைக்காக சம்பளம் கொடுத்து சிங்கம்புலியை மலேசியா அழைத்துச் சென்ற அஜித் |

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அதிரடி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்திருந்தார். வேணு ஸ்ரீராம் என்பவர் இயக்கியிருந்தார். ஹிந்தியில் அமிதாப் நடிப்பில் பிங்க் என்கிற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்று பின்னர் தமிழில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்கிற பெயரில் ரீமேக்கும் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த இரண்டு மொழிகளையும் தாண்டி தெலுங்கில் இந்த படம் வெளியான போது கமர்சியலாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தாங்களே முந்திக்கொண்டு உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் வேணு ஸ்ரீராம். சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், வக்கீல் சாப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார். பவன் கல்யாண் தற்போது தன் கைவசம் உள்ள படங்களை முடித்ததும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்.




