கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி | வாரணாசி : ராமர் Vs கும்பகர்ணன் கதை | 'சிங் கீதம்' படத்தில் நடிக்க ஆசைப்பட்ட கமல்ஹாசன் | ஓடிடியில் வரவேற்பைப் பெற்றுள்ள 'லீடர்' | அடுத்தடுத்து அறிவிக்கப்படும் புதிய படங்களின் வெளியீடுகள் | ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு நிறைவு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் | மோகன்லால் படம் நிறுத்தப்பட்டதாக வெளியானது தவறான தகவல் ; இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் பற்றிய கிளாமர் விமர்சனம் : மன்னிப்பு கேட்ட 'பெத்தி' இயக்குனர் | ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா |

முன்னணி கன்னட நடிகர் கிச்சா சுதீப். நான் ஈ, புலி படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். சமீபத்தில் 'விக்ராந்த் ரோணா, கப்ஜா' ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது 'லக்கிமேன்' படத்தில் சிவராஜ்குமாருக்கு வில்லனாக நடித்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் அனுதாபியான கிச்சா சுதீப், வருகிற கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜவுக்கு பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கிச்சா சுதீப் கர்நாடக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் புண்யகோடி தத்து யோஜனா (பசு தத்தெடுப்புத் ) திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். "பசுக்களை பராமரிக்கவும், கோசாலைகளை விரிவுபடுத்தவும் மக்கள் அரசுடன் கைகோர்த்து செயல்படும் ஒரு வாய்ப்பாக இந்த திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை பிரபலப்படுத்த நடிகர் கிச்சா சுதீப்பை நாங்கள் தூதராக இணைத்துள்ளோம். சுதீப் புண்யகோட்டி தத்து யோஜனாவை மாநிலம் முழுவதும் பரப்ப உதவுவார்” என்று துறையின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.