ரஜினி 173வது படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட பிரபலம்! | தனுஷ் 55வது படத்தில் தெலுங்கு நடிகர்! | கர்நாடக பாடகி எஸ்.ஜே. ஜனனிக்கு 'எம்போஹெர்' விருது | கவுண்டமணி கதாபாத்திர பெயரை டைட்டிலாக வைத்து நடிக்கும் யோகிபாபு | மம்முட்டி சுரேஷ்கோபி பட தயாரிப்பாளருக்கு நான்கு வருட சிறை ; 67 லட்சம் அபராதம் | 'பிரம்மயுகம்' டைரக்டரின் புதிய ஹாரர் படத்தில் நடிக்கும் பிரித்விராஜ்-மஞ்சு வாரியர் | என்னிடம் கேட்காமலேயே கதையை மாற்றி விட்டார் ; வரலட்சுமி மீது 'சரஸ்வதி' பட கதாசிரியர் குற்றச்சாட்டு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனருக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் | 3ம் மனுஷியின் 3ம் தர டுவீட்.. வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்: திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் கருத்து | கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் |

பாலிவுட்டில் வெளியான 'கல்லி பாய்' படத்தில் நடித்து புகழ் பெற்றவர் மல்லிகா சிங். ஜான்பாஸ் சிந்துபாத், ராதாகிருஷ், ஜெய் கன்கய்யா லால் கி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். எஸ்கேப் லைவ் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் கன்னட படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். சுனி இயக்கத்தில் வினய் ராஜ்குமார் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் மூலம் கன்னட சினிமாவுக்கு வருகிறார். இந்த படத்தில் அவர் காஷ்மீர் பெண்ணாக நடிக்கிறார். மல்லிகா சிங் நடித்த இந்தி வெப் சீரீசான 'ராதா கிருஷ்' தொடர் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரபலமானது. இதன் மூலம் அவர் கன்னட மக்களுக்கு அறிமுகமானதால் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. படத்திற்கு வீர் சமத் இசையமைக்கிறார். சபா ஒளிப்பதிவாளர். இது ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரி.