முதல்வர் விஜயை சந்திக்க காத்திருக்கிறேன்.. விக்னேஷ் சிவன் நல்ல மனிதர்: நடிகை சோனா | ஆதவ் அர்ஜூனா, ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி சந்திப்பு ஏன்? | கூடுதலாக ஒரு காட்சி: அரசு உத்தரவால் சினிமாவுக்கு லாபமா? | 'முறைமாமன்'-ஐ ரீமேக் பண்ண ஆசை: சுந்தர்.சி, குஷ்பு மகள் அனந்திதா | 7 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பியுள்ள ஆன் ஷீத்தல் | ஒரு வழியாக திரைக்கு வருகிறார் 'இதயம் முரளி' | 'இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு: இளையராஜா மறுஆய்வு மனு தள்ளுபடி | பிளாஷ்பேக்: வில்லனை நண்பன் ஆக்கியதால் தோல்வி அடைந்த ரஜினி படம் | பிளாஷ்பேக்: டைட்டிலால் தோல்வி அடைந்த எம்ஜிஆர் படம் | மகேஷ்பாபு குடும்பத்தினருடன் தியேட்டர் விசிட் அடித்த பிரியங்கா சோப்ரா |

மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். அந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம், அதைத்தொடர்ந்து கமலின் தூங்காவனம், பின்னர் த்ரிஷ்யம் 2 ஆகிய படங்களிலும் நடித்தார். இப்போதும் சீரான இடைவெளியில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஆஷா சரத், அவரது மகள் உத்தராவும் 'கெத்தா என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அம்மாவைப் போலவே இவரும் நடனத்தில் வல்லவர். பிட்ஸ் பிளானியில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார்.
இன்னொரு பக்கம் மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வரும் உத்தரா கடந்த வருடம் நடைபெற்ற அழகிப்போட்டி ஒன்றில் கலந்து கொண்டு ரன்னர் ஆக வெற்றி வெற்றி பெற்றுள்ளார். இந்தநிலையில் உத்தராவுக்கும் ஆதித்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நேற்று கொச்சியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் மம்முட்டி, சுரேஷ்கோபி, திலீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




