பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

கடந்த டிசம்பர் மாதம் தெலுங்கில் உருவாகி பான் இந்தியா படமாக வெளியான 'புஷ்பா ; தி ரைஸ்' படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுனின் நட்சத்திர அந்தஸ்து மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக தென்னிந்தியா மட்டும் அல்லாது பாலிவுட்டிலும் அல்லு அர்ஜுன் படங்களுக்கு தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் பேசும் வசனங்களும் அவரின் சில மேனரிசங்களும் இந்தியாவைத் தாண்டி வெளிநாட்டில் உள்ளவர்களையும் வசீகரித்தன.
அது எந்த அளவுக்கு எதிரொலித்தது என்றால், சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற, சுமார் ஐந்து லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொண்ட, 'இந்தியா டே பரேட்' நிகழ்ச்சியில் நியூயார்க் மேயர் எரிக் ஆடம் உடன் இணைந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார் அல்லு அர்ஜுன். அதுமட்டுமல்ல அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அல்லு அர்ஜுன் மீதான தனது ஈர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் தனது தாடையின் கீழ் கைவைத்து தேய்க்கும் மேனரிசத்தை நியூயார்க் மேயரும் செய்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள அல்லு அர்ஜுன், “நியூயார்க் மேயரை சந்தித்தது ரொம்பவே மகிழ்ச்சி. அவர் பழகுவதற்கு எளிதான ஜென்டில்மேன். என்னை கவுரவப்படுத்தியதற்கு மிக்க நன்றி எரிக் ஆடம்ஸ்” என்று கூறியுள்ளார்.




