பிளாஷ்பேக்: இயக்குநர் ஏ ஜெகன்னாதனின் “படகோட்டி” பட அனுபவங்கள் | அட்வான்ஸ் கேட்டு நச்சரிப்பு: பாலிவுட்டுக்கு 'ஜூட்' விட்ட நடிகர் | தில்லானா மோகனாம்பாள், நட்புக்காக, கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் |

அட்லீ இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து 2016ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‛தெறி'. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பிரபாஸ் நடித்த ‛சாஹோ' படத்தை இயக்கிய சுஜித் இந்தப் படத்தை இயக்கப் போகிறாராம்.
‛தெறி' ரீமேக் பற்றி கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன. இப்போதுதான் பவன் கல்யாண் நடிக்க சம்மதம் தெரிவித்துள்தாகச் சொல்கிறார்கள். பவன் கல்யாண் தற்போது ‛ஹரஹர வீர மல்லு, பாவதீயுடு பகத் சிங்' மற்றும் ‛வினோதய சித்தம்' தெலுங்கு ரீமேக் ஆகியவற்றை தன் வசம் வைத்துள்ளார். இப்போது ‛தெறி' ரீமேக்கும் அவரது படங்களின் வரிசையில் இணைகிறது.