சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் | நடிகர் ரகுநாத் மாரடைப்பால் காலமானார் | மீண்டும் தாத்தாவான நடிகர் சிரஞ்சீவி! | சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! | 'அசுரன்' பட பாடலுக்கு கிடைத்த விருது: ஜி.வி.பிரகாசுக்கு நன்றி சொன்ன பாடகி சைந்தவி! | மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்? | சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல் | 94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்! | '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்! | இயக்குனராக மாறும் பிரபல எழுத்தாளர்! |

மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு என வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை உருவாக்கி வருபவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. இதுநாள் வரை அறிமுக ஹீரோக்களையும் குணச்சித்திர நடிகர்களையும் வைத்து படம் இயக்கி வந்த லிஜோ ஜோஸ் முதன்முறையாக மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். ரம்யா பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை வெறும் 17 நாட்களுக்குள் எடுத்து முடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் லிஜோ.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசருக்காக இயக்குனர் பெரிய அளவில் எல்லாம் மெனக்கெடவில்லை. இந்த டீசரில் படத்தின் நாயகன் மம்முட்டி முதல் படத்தில் நடித்துள்ள பல கதாபாத்திரங்களும், ஆடு கோழி உள்ளிட்ட பிராணிகளும் கூட நண்பகல் நேரத்தில் தங்களை மறந்து கண்ணயர்ந்து உறங்கும் காட்சிகளை ஒன்றிணைத்து அதை டீசராக வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக கட்டாந்தரையில் கைகளை தலைக்கு வைத்துக் கொண்டு மம்முட்டி தூங்கும் காட்சி மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ளது. நேற்று உலக தூக்க தினம் என்பதால் மனிதர்களுக்கு தூக்கம் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த படத்தின் டீசரை வெளியிட்டு உள்ளார்கள்.