
நடிப்பில் கவனம் செலுத்தும் வினித் ஸ்ரீனிவாசன்
மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், தட்டயன் மறையத்து, ஒரு வடக்கன் செல்பி, தீரா, ஜாக்கப்பிண்ட சுயராஜ்யம் உள்பட பல படங்களை இயக்கினார். கடைசியாக ஹிருதயம் படத்தை இயக்கினார். இதில் மோகன்லால் மகன் பிரணவ், லிஸி மகள் கல்யாணி நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பின் பக்கம் கவனம் செலுத்துகிறார் வினித்.
அபினவ் சுந்தர் என்ற புதுமுகம் இயக்கும் ""முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்"" என்ற படத்தில் நடிக்கிறார். வினித்துடன் சுராஜ் வெஞ்சாரமூடு, அர்ஷா பைஜு, ரியா சைரா, தாரா அமலா ஜோசப் மற்றும் சுதி கொப்பா ஆகியோரும் நடிக்கிறார்கள். சச்சின் வாரியர் இசையமைக்கிறார், விஸ்வஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவு செய்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!