கார்த்திக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி? | 'நடிகர்கள் உண்மை ஹீரோக்கள் அல்ல' : நடிகர் சூரி வெளிப்படை | ‛பெத்தி' ஓடிடி விற்பனை எவ்வளவு | 7 வருடங்களுக்குப் பிறகு தேவ் பட இயக்குனருக்கு கிடைத்த வாய்ப்பு! | ரஜினி - கமல் இணையும் படம்: இன்று அறிவிப்பு வெளியாகிறது? | தனுஷ் 55 படப்பிடிப்பு நாளை முதல் துவங்குகிறது | டாக்சிக் டீசர் நாளை வெளியாகிறது | நடிகை டூ ஓவியக் கலைஞர்: ஷாம்லியின் தனித்துவ வளர்ச்சி | கெணத்த காணோம் : வடிவேலு காமெடி டயலாக்கில் யோகிபாபு படத் தலைப்பு | பிளாஷ்பேக் : நீச்சல் உடையில் பரபரப்பு கிளப்பிய அமலா |

மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படம் தெலுங்கில் தற்போது பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக்காகி உள்ளது. பவன் கல்யாண் மற்றும் ராணா இருவரும் இணைந்து நடித்துள்ள இந்தப்படத்தை சாஹர் சந்திரா என்பவர் இயக்கியுள்ளார். த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் திரைக்கதை அமைத்துள்ளார். வரும் பிப்-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.
தமன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அய்யப்பனும் கோஷியும் படஹ்தில் ஹிட்டான அறிமுக பாடல் போலவே பீம்லா நாயக் படத்திலும் டைட்டில் பாடலை தெலங்கானாவை சேர்ந்த தர்ஷனம் மொகுலையா என்கிற நாட்டுப்புற பாடகரை அழைத்து பாட வைத்திருந்தார் தமன். தற்போது பின்னணி இசைக்கோர்ப்பு எல்லாம் முடிந்து மொத்த படத்தையும் பார்த்த பவன் கல்யாண் ரொம்பவே சந்தோஷமாகி தமனை பாரட்டியுள்ளார்.
பவன் கல்யாண் தன்னை கட்டியணைத்து பாராட்டிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ள இசையமைப்பாளர் தமன், இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததற்காக இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். .




