லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மலையாள நடிகர் திலீப் ஏற்கனவே கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி 3 மாத சிறைவாசம் அனுபவித்து, அதன்பின் ஜாமினில் வெளியே வந்தார். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் அவரது நண்பராக இருந்து தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ள இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர், நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வீடியோ கிளிப்புகளை திலீப் தனது மொபைல் போனில் பார்த்தார் என்றும், அந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என்றும் போலீசில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் திலீப் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தார் திலீப். கிட்டத்தட்ட 6 முறைக்கு மேல் தள்ளிவைக்கப்பட்ட இந்த மனுவின் மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் கோபிநாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதற்கு முன்னதாக திலீப்பிடம் மூன்று நாட்கள் கிரைம் பிராஞ்ச் போலீசார் விசாரித்து தாக்கல் செய்த அறிக்கையை பரிசீலித்த நீதிபதி, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் திலீப்பிற்கு முன்ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திலீப் தரப்பு வட்டாரம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.