இனி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பேன் : டாக்டர் ராஜசேகர் | ஒருவேளை ராம்சரண் படம் வெளியானால்.. ? தில் ராஜு போட்ட கண்டிஷன் | நிவின்பாலியின் படம் மறைந்த கேரள முதல்வர் பற்றியதா ? இயக்குனர் விளக்கம் | பழிவாங்கும் எண்ணத்துடன் தான் துரந்தரில் நடித்தேன் : அர்ஜுன் ராம்பால் | துபாயில் செட்டில் ஆன திரிஷ்யம் நடிகை | யாரும் செய்யாத சாதனை புரிந்த 'தாய் கிழவி' | ஆளுமை உரிமை : நீதிமன்றத்தை நாடிய மோகன்லால் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் நடிக்கும் அனுஷ்கா சர்மா | பிளாஷ்பேக்: மாநிலங்கள் கடந்தும் மகத்தான வெற்றியைப் பதிவு செய்த மாற்றுமொழி திரைப்படம் | தீபாவளியை குறிவைத்த கார்த்தியின் மார்ஷல் |

பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் மலையாளப் படம் ஆடுஜீவிதம். புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமினின் நாவலை அதே தலைப்பில் படமாக்குகிறார்கள். அமலாபால், லட்சுமி சர்மா, லீனா, அபர்ணா பாலமுரளி, வினித் சீனிவாசன் உள்பட பலர் நடிக்கிறார்கள். கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் பெரும்பகுதி கதைக்களம் அரேபிய பாலைவனத்தில் நடக்கிறது. அங்கு படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்காததால் அல்ஜீரியா மற்றும் ஜோர்டான் பாலைவனத்தில் படமாக்கப்பட்டது. அப்போது திடீர் கொரோனா ஊரடங்கு உலகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டதால் பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அல்ஜீரியாவில் மாட்டிக் கொண்டனர். பின்னர் இந்திய அரசின் உதவியுடன் தனி விமானத்தில் நாடு திரும்பினார்கள்.
இந்த நிலையில் படப்பிடிப்பை மீண்டும் அல்ஜீரியா மற்றும் ஜோர்டானில் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். மார்ச் மாதத்தில் இருந்து 4வது கட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இயக்குனர் பிளெஸ்ஸி மற்றும் அவரது குழுவினர் பிப்ரவரி 15ம் தேதி ஜோர்டானுக்கு செல்கிறார்கள். பிருத்விராஜ் மார்ச் முதல் வாரம் செல்வார் என்று தெரிகிறது.




