8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி | இருமுடிகட்டு : அய்யப்பன் மகிமை பேசும் இருமொழிப் படம் | காதல் கணவரை விவாகரத்து செய்யும் சுபா பூஞ்சா | பிளாஷ்பேக் : ஹிந்தி ரீமேக் படத்திற்கு திரைக்கதை எழுதிய கருணாநிதி | பிளாஷ்பேக் : தேவரை 'வாழ வைத்த தெய்வம்' | சிக்மா பாடல் டான்ஸ் : நடிக்க ஆசைப்படுகிறாரா ஜேசன் சஞ்சய் | சாய் அபயங்கரின் 3வது 200 மில்லியன் ஆல்பம் | பிகினி தோற்றம் : கிரித்தி சனோன் வெளியிட்ட தகவல் | ராம்சரண் மனைவியிடம் இருந்து திரிஷாவுக்கு பறந்து வந்த பரிசுப் பெட்டகம் |

தெலுங்கில் சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் அனசுயா பரத்வாஜ். ரங்கஸ்தலம், யாத்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து ஓரளவு பிரபலமான இவர், சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார். இந்தநிலையில் மம்முட்டி நடிக்கும் 'பீஷ்ம பர்வம்' படத்தில் நடிப்பதன் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் அனசுயா பரத்வாஜ். மம்முட்டியை வைத்து 'பிக் பி' என்கிற கேங்ஸ்டர் படத்தை இயக்கிய இயக்குனர் அமல் நீரத் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மம்முட்டியுடன் இணையும் படம் இது.
ஏற்கனவே தெலுங்கில் மம்முட்டி நடித்த யாத்ரா படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ள அனசுயா, பீஷ்ம பருவம் படத்தில் நடுத்தர வயது பெண்ணாக ஆலிஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் இவரது கதாபாத்திர போஸ்டர் சமீபத்தில் வெளியானது. தெலுங்கு சினிமாவில் பார்த்ததற்கும் மலையாள படத்தில் பார்ப்பதற்கும் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போயுள்ளார் அனசுயா பரத்வாஜ்.




