
அல்லு அர்ஜுன் விளம்பரத்தை நீக்க நீதிமன்றம் உத்தரவு
இது அரசு போக்குவரத்து பேருந்துகளை அவமதிப்பு செய்யும் விதமாக இருப்பதாக கூறிய தெலங்கானா அரசு போக்குவரத்து கழக நிர்வாக மேலாளர் சஜ்ஜனார், அரசு சேவை நிறுவனங்களை அவமதிப்பு செய்யும் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதை அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார். இதை தொடர்ந்து அந்த நிறுவனம் விளம்பரத்தில் சிறிய மாற்றம் செய்ததே தவிர, அரசு பேருந்துகள் பற்றிய விமர்சனத்தை நீக்கவில்லை.
இதையடுத்து தற்போது தெலங்கானா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அந்த விளம்பரத்தை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது அந்த வீடியோவை நீக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு பேருந்துகள் என்பவை பொதுச்சொத்து. அவை மக்களை நம்பியே இயங்கி வருகின்றன. பல தலைமுறைகளாக தொடரும் அந்த சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது..



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!