Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா காதலை உறுதிப்படுத்தும் பாரிஸ் ட்ரிப்?

05 டிச, 2021 - 12:27 IST
எழுத்தின் அளவு:
vijay-devarakonda-rashmika-ParishTrip

கீதா கோவிந்தம் என்கிற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானது விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி. அதன்பிறகு டியர் காம்ரேட் படத்திலும் இவர்கள் இணைந்து நடித்தனர். ஆனால் கன்னடத்தில் தனது அறிமுகப்படத்தில் ராஷ்மிகா நடிக்கும்போது அந்தப்படத்தின் அந்தப்படத்தின் ஹீரோ ரக்சித் ஷெட்டிக்கும், இவருக்கும் காதல் மலர்ந்து நிச்சயதார்த்தம் வரை சென்றது.. ஆனால் அதன்பிறகு தெலுங்கில் ராஷ்மிகாவின் படங்கள் ஹிட்டாகி, முன்னணி நடிகையாக மாறியதும், நிச்சயதார்த்தத்தை ரத்துசெய்து, காதலரையும் பிரிந்துவிட்டார் ராஷ்மிகா.
மேலும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவரும் இணைந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தது, விழாக்களில் ஒன்றாக கலந்துகொண்டது ஆகியவற்றின் மூலம் இவர்கள் இருவருக்குள்ளும் நட்பையும் தாண்டி காதல் மலர்ந்துள்ளதாக கடந்த இரண்டு வருடமாகவே சொல்லப்பட்டு வருகிறது. தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் விஜய் தேவரகொண்டா, தான் நடித்துவரும் லைகர் படத்தின் படப்பிடிப்பிற்காக பாரிஸ் சென்றார். அதேசமயம் தனது படங்களுக்கு சற்றே ஒய்வு கொடுத்த ரஷ்மிகா, அதே பாரிஸுக்கு டூர் கிளம்பி சென்றார். தற்போது லைகர் படப்பிடிப்பை முடித்து விஜய் தேவரகொண்டா ஊர் திரும்பியுள்ளார்.
இதை தொடர்ந்து ராஷ்மிகாவும் தனது ட்ரிப்பை முடித்து தற்போது ஐதராபாத் திரும்பியுள்ளார். இருவரும் பாரிஸில் சந்தித்துக்கொண்டதாக புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ராஷ்மிகாவின் இந்த தனிப்பட்ட பயணம் அவர்களது காதலை உறுதி செய்வது போலத்தான் இருக்கிறது என டோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்..

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அழகிப்போட்டியில் மகளின் வெற்றி : ஆஷா சரத் பூரிப்புஅழகிப்போட்டியில் மகளின் வெற்றி : ஆஷா ... தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடும் பாலகிருஷ்ணாவின் 'அகான்டா' தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Ravivarma - Tirunelveli,இந்தியா
05 டிச, 2021 - 13:43 Report Abuse
Ravivarma இரண்டு பேரும் இந்தியா கலாச்சாரம் அழிப்பதில் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இரண்டு சாக்கடைகள் ஓடி கலப்பது என்ற கேவலமான செய்தி மக்களுக்கு அவசியமா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in