காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

விஷால் நடித்த சண்டக்கோழி படத்தில் மிரட்டலான வில்லன் நடிகராக நடித்தவர் மலையாள நடிகர் லால். இவரது மகன் ஜீன் பால் லால் என்கிற ஜூனியர் லால், தந்தையின் ஒரு வழியை பின்பற்றி நடிப்புக்கு செல்லாமல் இன்னொரு டைரக்ஷன் பக்கம் திரும்பி விட்டார். கடந்த வருடம் பிரித்விராஜ், சுராஜ் வெஞ்சராமூடு கூட்டணியில் இவர் இயக்கிய டிரைவிங் லைசென்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது, மற்ற மொழிகளிலும் அந்த படத்தின் ரீமேக் உரிமை மிகப்பெரிய அளவில் விற்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது, மலையாள இளம் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்கும் புதிய படமொன்றை இயக்குகிறார் ஜூனியர் லால். இதற்கு முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தந்தையுடன் இணைந்து இவர் இயக்கிய சுனாமி திரைப்படம் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், இந்த புதிய படத்தை கமர்ஷியல் அம்சங்களுடன் இயக்க உள்ளாராம்.




