42 ஆண்டுகளாக நடிக்கிறேன், என் முதல் படம் எது தெரியுமா? : சின்னி ஜெயந்த் | கிக் பாக்ஸிங் வீராங்கனையாக நடிக்கும் ஸ்ரீலீலா | அல்லு சிரிஷ் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்திய பசில் ஜோசப் | தவறான கோணங்களில் புகைப்படம் எடுப்பதா : ருக்மிணி வசந்த் கண்டனம் | ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | சல்மான்கான் உடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்த அவரது வளர்ப்பு குதிரை | இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி |

மலையாளத்தில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். கடந்த 2018ல் வெளியான ஜோசப் என்கிற படத்தில் கதையின் நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் கேரளாவில் கொச்சியில் உள்ள முக்கியமான சாலை ஒன்றில் மறியல் செய்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிகழ்வு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் கொச்சியில் உள்ள முக்கியமான சாலை ஒன்றில் பிரபல அரசியல் கட்சியினர் நேற்று காலை மறியல் செய்தனர். இதனால் அங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த நடிகர் ஜோஜு ஜார்ஜும் அந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கினார்.
நேரம் ஆக ஆக பொறுமை இழந்த ஜோஜு ஜார்ஜ், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சென்று போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக கூறினார். இதனால் கோபமான போராட்டக்காரர்கள் அவரது கார் கண்ணாடியை உடைத்தனர். இதை தொடர்ந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஜோஜு ஜார்ஜ்.
இந்த பரபரப்பான நிகழ்வு குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியானது. இதை தொடர்ந்து மறியல்காரர்கள் ஜோஜு ஜார்ஜ் குடித்துவிட்டு வந்து போராட்டக்காரர்களிடம் தெருவில் சண்டை போடும் குண்டர் போல நடந்து கொண்டதாகவும், பெண் ஒருவரிடம் அநாகரிகமாக பேசியதாகவும் புகார் அளித்தனர்.. ஆனால் போலீஸார் விசாரணையிலும் சோதனையிலும் ஜோஜு ஜார்ஜ் மது அருந்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதுபற்றி ஜோஜு ஜார்ஜ் கூறும்போது, “அவர்கள் சொன்னதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்பது அங்கிருந்த பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும்.. நான் போராட்டத்திற்கு எதிரானவன் அல்ல. அதேசமயம் பொதுமக்களுக்கு எந்த இடைஞ்சலும் ஏற்பட கூடாது இல்லையா?. அதைத்தான் அவர்களிடம் கூறினேன்.. மேலும் நான் மது அருந்துவதை நிறுத்தி ஐந்து வருடங்கள் ஆகின்றன” என கூறியுள்ளார்.




