துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ | காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி |

ரஞ்சித் எம் திவாரி இயக்கத்தில் அக்ஷய்குமார், ஹுமா குரேஷி, லாரா தத்தா, வாணி கபூர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பெல்பாட்டம்'. 1984ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு விமான கடத்தல் கதைதான் இப்படம்.
உளவுத் துறையான ரா ஏஜன்ட் ஆக அக்ஷய்குமார் நடிக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் யு டியூபில் வெளியானது. 24 மணி நேரத்தில் 2 கோடியே 32 லட்சம் பார்வைகளும் 4 லட்சத்திற்கு கூடுதலான லைக்குகளும் இந்த டிரைலருக்குக் கிடைத்துள்ளது.
2021ம் ஆண்டில் வெளிவந்த டிரைலர்களில் 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்ற டிரைலர் என்ற சாதனையை இந்த 'பெல்பாட்டம்' படைத்துள்ளது. இந்த வருடத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த 'ராதே' படத்தின் டிரைலர் 5 யு டியுப் சேனல்களில் வெளியாகி 2 கோடியே 20 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றிருந்தது. ஆனால், 12 லட்சம் லைக்குகளைப் பெற்றது.
முந்தைய அக்ஷய் குமார் படங்களில் சிலவற்றை ஒப்பிடும் போது பெல்பாட்டம் டிரைலரின் 24 மணி நேர சாதனை குறைவாகத்தான் உள்ளது.




