காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

கடந்த 2014ல் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் பீகே. ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவான இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆமிர்கான் நாயகனாக நடித்திருந்தார். அனுஷ்கா சர்மா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப்படம் ஒருபக்கம் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது என்றால், இன்னொரு பக்கம் இந்து கடவுள்களை இழிவுபடுத்தி விட்டதாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பையும் சம்பாதித்தது. அதேசமயம் வசூலையும் வாரி குவித்தது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் ஒரிஜினல் நெகடிவ்வை சமீபத்தில் இந்திய தேசிய திரைப்பட காப்பகம் (NFAI) வசம் ஒப்படைத்துள்ளார் ராஜ்குமார் ஹிரானி. இதுபற்றி அவர் கூறும்போது, “ஒவ்வொரு இயக்குனரும் தங்களது படத்தின் ஒரிஜினல் நெகடிவ்வை தமக்குப்பின் வரும் சந்ததியினருக்காகவும் திரைப்பட உருவாக்கம் குறித்து கற்கும் அடுத்த தலைமுறை மாணவர்களுக்காகவும் பாதுகாத்து வைக்க வேண்டியது அவர்களுடைய கடமை.. மற்ற இயக்குனர்களுக்கும் இதை ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்” என கூறியுள்ளார்.