பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… | காதலர் தின ஸ்பெஷல் 4 ரீ ரிலீஸ் | பிப்ரவரி 13ல் ரிலீஸ் ஆகும் படங்கள்… | ஆண் கர்ப்பமானால்... தமிழில் தயாராகியுள்ள வெப் தொடர் | மஹாராஜா 2ம் பாகத்திற்கு தயாராகும் விஜய்சேதுபதி | ஆரி அர்ஜுனனின் 'போர்த் புளோர்' | பிளாஷ்பேக் : படப்பிடிப்பு தவறாக நடந்ததால் பாட்டை மாற்றிய இளையராஜா | பிளாஷ்பேக் : எம்ஜிஆருக்கு பதில் நடித்த சிவாஜி |

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கரண் ஜோஹர். “குச் குச் ஹேதா ஹை, கபி குஷி கபி கம், கபி அல்விதா நா கெஹ்னா, மை நேம் இஸ் கான், ஸ்டூடன் ஆப்த இயர், பாம்பே டாக்கீஸ், ஹே தில் ஹை முஷ்கில்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
தனது தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்துள்ளார். கரண் ஜோஹர் கடைசியாக இயக்கிய படம் 2016ம் ஆண்டு வெளிவந்தது. கடந்த ஐந்து வருடங்களாக எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லை. தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
தன்னுடைய இடைவெளிக்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தனது புதிய படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். ரன்வீர் சிங், ஆலியா பட் நடிக்க 'ராக்கி அஹவர் ராணிகி பிரேம் கஹானி' என்ற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துளளார். இன்று ரன்வீர் சிங் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு இப்படம் வெளியாகும்.
“லென்ஸுக்கு முன்னால் எனது அபிமான மக்கள் இருக்கா, அதன் பின்னால் நான் இருப்பது த்ரில்லிங்காக உள்ளது” என இந்த புதிய பட அறிவிப்பு குறித்து கரண் குறிப்பிட்டுள்ளார்.