ராதே வசூல் ஜீரோ - சல்மான் கான்
மே 11, 2021
Advertisement
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா பதானி மற்றும் பலர் நடிக்கும் "ராதே" படம் நாளை மறுநாள் டிஜிட்டல் தளங்களில் வெளியாகிறது. அதற்கான கட்டணமாக 249 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தன்னுடைய படம் தியேட்டர்களில் வெளியாகாத காரணத்தால் அதன் வசூல் ஜீரோ எனக் குறிப்பிட்டுள்ளார் சல்மான்கான்.
“நான் எப்போதுமே ரம்ஜானுக்கு என்னுடைய ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். இந்த முறை ஜீ ஆதரவில் படத்தை டிஜிட்டல் தளங்களில் வெளியிடுகிறோம். தற்போது மக்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலரது வருமானம் குறைந்துவிட்ட நேரத்தில் இப்படத்தை மிகக் குறைந்த செலவில் வீட்டிலேயே பார்க்கலாம். இந்த நேரத்தில் மக்களுக்கு கொஞ்சம் என்டெர்டெயின்மென்ட் கொடுப்பதை விரும்புகிறேன்.
இந்தப் படத்தை தியேட்டர்களில் வெளியிட்டு லாபம் சம்பாதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தியேட்டர்காரர்களிடம் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் நீண்ட காலமாக இதற்காக காத்திருந்தோம், நாடு முழுவதும் படத்தைத் தியேட்டர்களில் வெளியிடலாம் என்று இருந்தோம். ஆனால், அது நடக்கவில்லை. மீண்டும் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்பது தெரியவில்லை.
"ராதே" படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ஜீரோவாகத்தான் இருக்கும். ஒரு சல்மான்கான் படத்தின் மிகக் குறைந்த வசூலை இந்தப்படம் பெறும். மக்கள் மகிழ்ச்சியாகவே, கவலையாகவே இருக்கலாம். இந்தப்படம் இந்தியாவில் சில தியேட்டர்களில் வெளியாகிறது. வெளிநாடுகளிலும் வழக்கத்தை விடக் குறைவான தியேட்டர்கள்தான். அதனால் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மிகவும் மோசமாகத்தான் இருக்கும்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!