Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நான் ராஜ நாகத்தை போன்றவன் - மிதுன் சக்ரவர்த்தி

08 மார், 2021 - 11:07 IST
எழுத்தின் அளவு:
Mithun-chakraborty-in-BJP

80களில் ஹிந்தியில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் மிதுன் சக்ரவர்த்தி. இன்றைக்கு வாத்தி கம்மிங் மாதிரி அன்றைக்கு ஐ எம் ஏ டிஸ்கோ டான்சர் என்று பாடி ஆடித் திரிந்தார்கள் 80ஸ் கிட்ஸ். தமிழில், மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் நடித்துள்ளார். யாகாவாராயினும் நா காக்க படத்தில் வில்லனாக நடித்தார்.

சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் அரசியலில் குதித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அந்த கட்சியின் சார்பில் எம்.பி.யாக இருந்தார். மேற்கு வங்கத்தை குலுக்கிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் அவரது பெயர் அடிபட்டதால், எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று கோல்கட்டாவில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அவர் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி தன்னை இணைத்துக் கொண்டார். "நண்பர் மிதுன் சக்ரவர்த்தியை பாரதிய ஜனதா கட்சிக்கு மகிழ்வுடன் வரவேற்கிறேன்" என்றார் பிரதமர் மோடி.

மிதுன் பேசும்போது, என்னை சாதுவான பாம்பு என்று நினைத்துவிடாதீர்கள். நான் ராஜ நாகத்தை போன்றவன். ஒருமுறை தீண்டினாலே உயிர் போய்விடும், என அவரது திரைப்படத்தில் வரும் பிரபலமான வசனத்தை, மேடையில் பேசி கைதட்டல் பெற்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மிஷன் மஞ்சு படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகாமிஷன் மஞ்சு படப்பிடிப்பில் இணைந்த ... அமெரிக்காவில் உணவகம் திறக்கிறார் பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் உணவகம் திறக்கிறார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

gayathri - coimbatore,இந்தியா
09 மார், 2021 - 10:30 Report Abuse
gayathri athukku என்ன இப்போ. நீங்க ஒரு காலத்திலும் மனிதனாக இருக்க வாய்ப்பில்லை என்பதை சொல்ல வருகிறாயா விலங்குகளாக கூட நீங்கள் இருக்க தகுதி அற்றவர்கள். மனிதனாக பிறந்தவன் மனிதனாக இருக்க வேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in