
ஹிந்தியில் உருவாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை படம்!
இதையடுத்து தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படமும் ஹிந்தியில் தயாராகப் போகிறது. ஏக் அவுர் நரேன் என்று பெயரிப்பட்டுள்ள இந்த படத்தை வங்காள மொழி இயக்குனர் மிலன் பவுமிக் இயக்குகிறார்.
இவர் இதற்கு முன்பு டில்லியில் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த நிர்பயாவின் கதை, சியாம பிரசாத் முகர்ஜி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு கதைகளை படமாக எடுத்தவர். மேலும், ஏக் அவுர் நரேன் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கும் இவர், பிரதமர் மோடியின் கதைக்குள், விவேகானந்தரைப் பற்றிய பயோபிக்கையும் இணைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரதமர் மோடியின் வேடத்தில் மகாபாரத தொடரில் யுதிஷ்டிரர் வேடத்தில் நடித்த கஜேந்திர சவுஹான் நடிக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!