‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

சினிமா மற்றும் கலாச்சாரத்தின் ஒரு மைல்கல் கொண்டாட்டமாக, இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகளாவிய நிகழ்வு படங்களில் ஒன்று அவதார் : பயர் அண்ட் ஆஷ். ஜேம்ஸ் கேமரூனின் அற்புத படைப்பான அவதார் படத்தின் மூன்றாம் பாகம் உலகளவில் அடுத்தவாரம் வெளியாகிறது. இதையொட்டி பனாரஸில் உள்ள கங்கையின் புனிதக் கரையில் அதன் சிறப்பு தேவநாகரி திரைப்பட லோகோ வெளியிடப்பட்டது. இது இந்தியாவின் ஆன்மிக மையப் பகுதியையும் உலகின் மிகவும் சின்னமான சினிமா பிரபஞ்சங்களில் ஒன்றையும் ஒன்றிணைக்கிறது.
இந்தப் புதிய காட்சி அடையாளம் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை கவுரவிக்கிறது. அதே நேரத்தில் படத்தின் முக்கிய அம்சங்களான நெருப்பு, ஒளி மற்றும் மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜஸ்டின் - உதய் இரட்டையர்களின் இசை நிகழ்ச்சியும் நடந்தது. மேலும் படத்தின் அடிப்படை கருப்பொருள்களான நெருப்பு மற்றும் சாம்பலால் ஈர்க்கப்பட்டு, சீசர் நடனமும் நடந்தது.
அவதார் 3 படம் உலகம் முழுவதும் டிச.,19ல் வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளியாகிறது.