மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

1997ல் ஹிந்தியில் ஜேபி தத்தா இயக்கத்தில் சன்னி தியோல், ஜாக்கி ஷெராப், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான வெற்றி படம் ‛பார்டர்'. 28 ஆண்டுகளுக்கு பின் இதன் இரண்டாம் பாகம் தற்போது ‛பார்டர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது. அனுராக் சிங் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த சன்னி தியோல் இதிலும் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இவருடன் வருண் தவான், தில்ஜித் தோசன்ஜ், அஹான் ஷெட்டி, சோனம் பஜ்வா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது தில்ஜித் தோசன்ஜ் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போர்க்கள பின்னணியில் ஒரு போர் விமானத்தில் அமர்ந்திருக்கும் தில்ஜித், அசைக்க முடியாத தைரியத்துடனும், துல்லியத்துடனும் தேசத்தை பாதுகாக்கும் ஒரு இந்திய விமானப்படை அதிகாரியாக, கடுமையான தோற்றத்துடன் காணப்படுகிறார். அதோடு அவரின் தேசபக்தியும் படத்தின் போஸ்டரில் வெளிப்படுகிறது.
இந்திய விமானப்படை மற்றும் வான்வழி நடவடிக்கை மற்றும் நிலத்திற்கு அப்பால் பரவும் வீரத்தின் கதையை உறுதியளிக்கிறது. தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு வரும், 2026, ஜன., 23ம் தேதி படம் ரிலீஸாகிறது.