தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி | 'தாய்கிழவி' 22 கோடி.. 'வித் லவ்' 35 கோடி | பிளாஷ்பேக் : பாலுமகேந்திராவின் நிறைவேறாத சிவாஜி கனவு | பிளாஷ்பேக் : பாட வந்தவர் நடிகை ஆனார் | அமரனில் மிஸ் ஆச்சு... சேயோனில் அது நடக்குமா? | இயக்குனர் விஜய் என் வழிகாட்டி : ஜியா சங்கர் நெகிழ்ச்சி | நடிகை ஸ்ருதிகாவுக்கு வைரஸ் காய்ச்சல் | மறைந்த இயக்குனர் குடும்பத்துக்கு நிதி உதவி: மேடையிலே செக் கொடுத்தார் யோகி பாபு |

அயன் முகர்ஜி இயக்கத்தில், ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான ஹிந்திப் படம் 'வார் 2'. இப்படத்தின் வெளியீட்டை 'எக்ஸ்க்ளுசிவ்' என்ற பெயரில் '“ஐமேக்ஸ் 2டி, 4 டிஎக்ஸ், டால்பி சினிமா 2டி, ஐஸ்” என திரையீட்டு வடிவங்களிலும் இரண்டு வாரங்களுக்குத் திரையிட ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அதனால், 'கூலி' படத்தை அந்த வடிவங்களில் திரையிடு முடியவில்லை.
இதனிடையே, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'வார் 2' படத்திற்கான விமர்சனங்கள் அதற்கு பின்னடைவைத் தந்துள்ளன. தெலுங்கு நடிகரான ஜுனியர் என்டிஆர் நடித்திருந்தும் தெலுங்கு மாநிலங்களில் முதல் நாளில் மட்டும் நல்ல வரவேற்பு இருந்துள்ளது. விமர்சனங்களின் தாக்கத்தால் அடுத்தடுத்த நாட்களில் குறிப்பிடத்தக்க முன்பதிவு இல்லை.
வட இந்திய மாநிலங்களிலும் படம் பெரும் வசூலைக் குவிக்க வாய்ப்பில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழிலும் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிட்டுள்ளார்கள். ஆனால், படக்குழுவினர் தமிழுக்காக எந்தவிதமான புரமோஷனையும் செய்யவேயில்லை. அதனால், இங்குள்ள ரசிகர்கள் படத்தைக் கண்டுகொள்ளவே இல்லை.