'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

பாலிவுட்டில் அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாக தயாராகி வரும் படம். 'வார்-2'. ஹிருத்திக் ரோஷன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் முதன்முறையாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்துள்ளார் ஜூனியர் என்டிஆர். இந்த படத்தில் இவர் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ராணுவ பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. 'கூலி' திரைப்படம் வெளியாகும் அதே ஆகஸ்ட் மாதம் தான் இந்த படமும் வெளியாக இருக்கிறது.
படத்தில் ஜூனியர் என்டிஆரும் ஹிருத்திக் ரோஷனும் மோதும் சண்டைக்காட்சிகளும் இருக்கின்றன. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரில் ஹிருத்திக் ரோஷன் சண்டைக் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இதில் ஹிருத்திக் ரோஷன் தனது கைகளில் ஒரு கோடாரியை சுழற்றும் காட்சி ஒன்று அப்படியே இதற்கு முன்பு 'பைரவா' படத்தில் விஜய் நடித்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் இடம் பெற்றிருந்தது. இதை பார்த்துவிட்டு விஜய் ரசிகர்கள் பலர், விஜய்யின் ஸ்டைல் பாலிவுட்டையும் விட்டு வைக்கவில்லையா என்று பெருமிதத்துடன் கமெண்ட் போட்டு வருகின்றனர்.