
மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான்
இந்த படத்தில் ஷாரூக்கான் மகள் சுஹானா படத்திலும் மகளாகவே நடிக்கிறார். ஏற்கெனவே ஜோயா அக்தர் இயக்கத்தில் "தி ஆர்ச்சிஸ்" என்ற ஓடிடி படத்தில் அறிமுகமான சுஹானா, இப்படத்தின் மூலம் நேரடி திரையரங்க திரைப்படத்தில் நடிக்கிறார். கொடூரமான மனிதன் மகள் மீது மிகுந்த பாசம் கொண்டவனாக இருக்கிறான். அதனால் தனக்கு தெரிந்த அத்தனை வித்தைகளையும் மகளுக்கு கற்றுக் கொடுத்து அதை நேர்மையாக பயன்படுத்தி அவளை ஹீரோயின் ஆக்குவது மாதிரியான கதை. கடைசியில் மகளே தந்தையை கொன்று விடுவது போன்றும் கதை அமைக்கப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த படத்திற்காக இப்போதே சுஹானா கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 2025ம் ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!