அன்னையர் தினத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ | 'மைதான்' படம் தோல்வி : தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம் | என்கிட்ட மோதாதே... நான் ராஜாதி ராஜனடா...! | உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள ‛எலக்சன்' | நடிகை நவ்யா நாயரின் சென்னை நினைவுகள் | அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் |
80களின் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்த ஸ்ரீதேவி பின்னர் பாலிவுட்டுக்கு சென்று அங்கும் முன்னணி நடிகை ஆனார். தயாரிப்பாளர் போனி கபூரை மணந்து கொண்ட அவருக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இருவருமே தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள்.
இதில் பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருந்த ஜான்வி கபூர், ஜூனியர் என்.டி.ஆரின் புதிய படமான 'தேவரா' மூலம் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்திருக்கிறார். ஜான்வி கபூர் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியாவை காதலித்து வருகிறார். இருவரும் ஆண்டு தோறும் திருப்பதி கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்து சென்றனர். பல பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டனர். ஆனால் ஜான்வி கபூர் தனது காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
ஆனால் அதனை தற்போது வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தியில் புகழ்பெற்ற 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்ககேற்ற அவரிடம் 'ஸ்பீட் டயல் லிஸ்ட்டில் உள்ள மூன்று பேர் யார்?' என்று கேட்க, அதற்கு ஜான்வி 'அப்பா, தங்கச்சி அப்புறம் ஷிக்கு' எனக் கூறி உள்ளார். அதோடு ஷிகர் பஹாரியாவை டேட் செய்வதையும் ஒத்துக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தங்கை குஷியும் கலந்து கொண்டார்.