இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் | பிப்ரவரி 13 ரிலீஸ் படங்கள் : இன்றைய நிலவரம் என்ன ? | ஒரு மாதம் விடுமுறை எடுக்கப் போகும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக்: உதவி இயக்குனராக பணியாற்றிய ரஜினிகாந்த் |

பாலிவுட்டில் கடந்த 2007ம் ஆண்டில் வெல்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2015ம் ஆண்டில் வெல்கம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது. தற்போது வெல்கம் படத்தின் மூன்றாம் பாகத்தை அறிவித்துள்ளனர்.
‛வெல்கம் டு த ஜங்கிள்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அஹ்மத் கான் இயக்குகிறார். அக்ஷய் குமார், சஞ்சய் டத், சுனில் ஷெட்டி, திஷா பதானி, ஜாக்குலின் பெர்னாண்டஸ், ரவீனா டாண்டன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2024 டிசம்பர் 20ம் தேதி அன்று வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இதன் அறிவிப்பு வீடியோ யூடியூபில் 1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும், முதல் இரண்டு பாகங்களில் நடித்த அனில் கபூர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.