பிளாஷ்பேக் : உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான “சாது மிரண்டால்” | எஸ்பிபி சிலை திறப்பு விழாவுக்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்த விஜய் யேசுதாஸ் | ரஜினிக்கு அம்மாவாக நடித்தவர் சட்டசபை தேர்தலில் போட்டி | அடுத்த ஹிந்தி படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய பூஜா ஹெக்டே | அனந்தபுரி ஆஞ்சநேயர் கோயிலில் விஜய தேவரகொண்டா, ராஷ்மிகா வழிபாடு | சாதி, மதம் இல்லாதவர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நடிகர் பார்த்திபன் | கைதி ஹிந்தி ரைட்ஸ் விவகாரம் : அஜய் தேவ்கன் மீது வழக்கு பதிவு செய்த ட்ரீம் வாரியர்ஸ் | மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி | 7ஜி ரெயின்போ காலனி 2 ரிலீஸ் எப்போது | தெலுங்கு படத்தை இயக்க தயாராகும் அஸ்வத் மாரிமுத்து |

அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் 'ஜவான்'. நயன்தாரா, பிரியாமணி , விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தீபிகா படுகோன் சிறப்பு வேடத்தில் தோன்றி உள்ளார். அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகின்றனர்.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஜவான் படத்தில் இருந்து மூன்றாவது சிங்கள் ' நாட் ராமையா வஸ்தவையா' எனும் முழு வீடியோ பாடல் நாளை வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.




