'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் ஹிந்தி திரைப்படம் அனிமல். ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி டியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி சீரியஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார் வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி அன்று இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. முழுக்க முழுக்க ஆக் ஷன் நிறைந்த படமாக தயாராகிறது. விரைவில் படத்தின் டீசர் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஒரு முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் மாஸ்க் அணிந்த நூற்றுக்கணக்கான அடியாட்களை ரன்பீர் கபூர் அடித்து துவம்சம் செய்து போன்று முன்னோட்ட வீடியோ உள்ளது. இந்த முன்னோட்டம் வைரலாகி வருகிறது.