ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு | பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்? | 'மாளிகைப்புரம்' இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள் | மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ் | 'எல்லம்மா' தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி | உலக டாப் 10 பாடல்கள் பட்டியலில் அனிருத்தின் 'டிசி' | 'கருப்பு': 300 கோடி வசூலைக் கடந்து சாதனை!! | டபுள் பிளாக்பஸ்டர் ஆன 'திரிஷ்யம் 3' | இனி கொஞ்ச நாளைக்கு மவுனம்: அரசியல் பேச்சு குறித்து சமுத்திரக்கனி விளக்கம் | முதல்வர் விஜயை சந்திக்க காத்திருக்கிறேன்.. விக்னேஷ் சிவன் நல்ல மனிதர்: நடிகை சோனா |

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பிரபாஸ், தான் நடித்த சாஹோ என்கிற ஒரு படத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தினார். ஆனால் அந்த படம் அவர் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற தவறியது. இதனால் தனது கொள்கையை மாற்றிக்கொண்டு தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார் பிரபாஸ். அந்த வகையில் தற்போது பிரசாந்த் நீல் டைரக்சனில் சலார், ஓம் ராவத் டைரக்ஷனில் ஆதிபுருஷ், நாக் அஸ்வின் இயக்கத்தில் புராஜெக்ட் கே மற்றும் இயக்குனர் மாருதி டைரக்ஷனில் ஒரு படம் என அவர் நடிப்பில் நான்கு படங்கள் தயாராகி வருகின்றன.
இதில் முதலில் வெளியாக இருக்கும் படம் ஆதிபுருஷ் தான். இதற்குமுன் வெளியிடப்பட்ட இந்த படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கிண்டலுக்கும், விமர்சனத்திற்கும் ஆளாகின. இருந்தாலும் வரும் ஜூன் மாதம் இந்த படத்தை வெளியிடும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் ஓம் ராவத். ஆனால் இன்னொரு பக்கம் புராஜெக்ட் கே படக்குழுவினர் தங்களது படப்பிடிப்பு குறித்த வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். இதனால் பிரபாஸ் ரசிகர்களின் கவனம் மட்டுமல்லாது மீடியாக்களின் கவனம் கூட அந்த படத்தின் பக்கம் தான் திரும்புகிறது என்கிற வருத்தத்தில் இருக்கிறார் இயக்குனர் ஓம் ராவத்.
இதற்கு முன்பு இப்படித்தான் சலார் படத்தின் அப்டேட்டுகள் அதிகம் வெளியானபோது அந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீலிடம் ஆதிபுருஷ் படத்தை ஹைலைட் செய்ய உதவுங்கள் என கேட்டுக்கொண்டதால் சமீப காலமாக சலார் பட அப்டேட்டுகள் வருவது குறைந்துவிட்டது. தற்போது புராஜெக்ட் குழுவினரிடம் இது போன்ற ஒரு கோரிக்கையை வைக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குனர் ஓம் ராவத்.