கைவிடப்பட்ட சவுந்தர்யா ரஜினிகாந்தின் வெப் தொடர் | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா! | ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? |
பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், லண்டனில் தலைமறைவாக வாழும் மோசடி தொழில் அதிபர் லலித் மோடியுடன் லிவிங் டூ கெதராக வாழ்வதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியானது. இந்த தகவலை வெளியிட்டதே லலித் மோடிதான்.
இந்த தகவல் வெளியானதும் சமூக வலைத்தளத்தில் சுஷ்மிதான சென்னை கிழித்து தொங்க விட்டார்கள். பணத்துக்காக எதையும் செய்வீர்களா? என்பது பிரதான கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் சுஷ்மிதா சென் கோபமான பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் மகிழ்ச்சியான ஓர் இடத்தில் இருக்கிறேன். யாரையும் நான் திருமணம் செய்யவில்லை. திருமணத்தின் அடையாளமாக எனது விரல்களில் எந்த மோதிரமும் இல்லை. என்னைச் சுற்றி அளவற்ற அன்பு சூழ்ந்துள்ளது அவ்வளவே. தற்போது மீண்டும் எனது வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டேன். இதை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன். இவ்வாறு எழுதியிருக்கும் சுஷ்மிதா, இந்த பதிவோடு தன் குழந்தைகளோடு இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.