அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

இயக்குனர் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான மகதீரா, ஈகா, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை கவனித்து பார்த்தால் ஓவொரு படத்திலும் அவர் எந்த அளவுக்கு இந்திய சினிமாவை உலக அளவில் அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார் என்பது நன்றாகவே தெரியும்.. சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படமும் கூட அவரது முந்தைய படங்களுக்கு சளைத்தது இல்லை என்றும் சொல்லும் விதமாக பிரமாண்டம் காட்டி இயக்கியிருந்தார்.
ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலக பிரபலங்களும் கூட ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ராஜமவுலியின் திறமையை வானளாவ புகழ்ந்து வருகின்றனர். அந்தவகையில் பாலிவுட் நடிகர் அனில் கபூர் இன்னும் ஒருபடி மேலே போய், ஹாலிவுட்டில் ஜேம்ஸ் கேமரூன் என்றால் அவருக்கான இந்தியாவின் பதில் தான் ராஜமவுலி என புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஏலியன், டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் படங்களை போல ஈகா, பாகுபலி-1, பாகுபலி-2, இப்போது ஆர்ஆர்ஆர் என ஜேம்ஸ் கேமரூனுக்கான இந்தியாவின் பதிலாக விளங்கும் ராஜமவுலி, ஒருநாள் அவரையும் மிஞ்சுவார்.. இந்திய சினிமாவை உலக அளவில் உயர்த்தி பிடித்ததற்காக ராஜமவுலிக்கு வாழ்த்துக்கள்” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் அனில் கபூர்.