தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! | ‛மதராஸி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக திட்டமிடும் படக்குழு! | கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்ட நாயகிகள்! | கணவரை பிரிந்து வாழ்கிறாரா ஹன்சிகா? | ‛‛அப்செட் ஆனால் இதை செய்வேன்'': ரகசியம் சொன்ன கீர்த்தி சுரேஷ் | தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” |
புத்தம் புதிய நிகழ்ச்சிகளையும், தொடர்களையும், ரியாலட்டி ஷோக்களையும் சுவாரஸ்யமாகவும், புதுமையாகவும் வழங்கி வருகிறது கலர்ஸ் தமிழ் சேனல். கடந்த 24ம் தேதி முதல் நகுல், ஓவியா, பிருந்தா ஆகியோர்களை நடுவர்களாக கொண்ட டான்ஸ் நிகழ்ச்சியை புதிதாக தொடங்கி உள்ள நிலையில் தற்போது ஓவியா என்கிற புதிய தொடரை ஒளிபரப்புகிறது.
ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த பெண்ணாக இருப்பினும் ஓவியா, அவளது கோட்பாடுகளையும், சித்தாந்தங்களை பின்பற்றுவதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறாள். சுற்றியுள்ள அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும் அவள், அவளது கனிவான நடத்தைக்காகவும், நேர்மைக்காகவும் பலரால் பாராட்டப்படுகிறாள்.
இதற்கு மாறாக வசதியான குடும்பத்தைச் சேர்ந்த காயத்ரியோ தனது இலக்குகளையும், இலட்சியங்களையும் அடைவதற்காக எந்தளவுக்கும் மோசமாக செல்வதற்கு தயாராக இருப்பதோடு பிறரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முற்படுபவளாக இருக்கிறாள். இருப்பதில் திருப்திகொள்ளும் நபராக ஓவியா இருக்கின்றபோது, எந்த நேரமும் மகிழ்ச்சியைத் தேடி அலைபவளாக காயத்ரி இருக்கிறாள்.
இந்த இரு இளம்பெண்களின் கதையும் மற்றும் அவர்களது காதல் உணர்வுகளினால் அவர்களுக்கிடையே ஏற்படும் பிளவும் இந்த கதையின் மையக்கருவாக அமைந்திருக்கிறது.
நவம்பர் 26 ஆம் தேதி இன்று முதல் தொடங்கவிருக்கும் இந்நிகழ்ச்சியானது, தினமும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணியிலிருந்து 7 மணி வரை ஒளிபரப்பாகிறது.