ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் |

புத்தம் புது தொடர்களை பிரமாண்டமாக சினிமா தரத்தில் தந்து கொண்டிருக்கிறது கலர்ஸ் தமிழ் சேனல். அந்த வரிசையில் அடுத்து வருகிறது ஓவியா என்ற தொடர். இது சென்னை கடற்கரையை ஒட்டிய மீனவர்களின் வாழ்வியலை சொல்லப்போகிற யதார்த்த தொடர்.
சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மீனவர் குப்பத்தை சேர்ந்தவள் ஓவியா.
படிப்பில் அவள் ரொம்ப புத்திசாலி. அதனால் ஊருக்கே அவள் செல்லப்பிள்ளை. அவள் 12ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாக தேர்வாகிறாள். அரசு பள்ளியில் படித்து முதல் மாணவியாக தேர்வாவதால் நாடே அவரை கொண்டாடுகிறது. குப்பத்து மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். ஆனால் அவர்கள் மகிழ்ச்சி நீடிக்கவில்லை... அது ஏன் என்பதுதான் தொடரின் திரைக்கதை.
வருகிற 26ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிறது. இன்றைய கல்வி முறையை சாடும் ஒரு அரசியல் கலந்த சமூக தொடராக ஓவியாக ஒளிபரப்பாக இருக்கிறது.




