அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி | நம் வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன் : கமல் | ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? | விஜய்சேதுபதிக்கு அடுத்த வெற்றி கிடைக்குமா? | நான் பெருமாள் பக்தன், அவரை கிண்டல் செய்யவில்லை : நடிகர் சந்தானம் சரண்டர் | நானியின் 'ஹிட் 3' படம் 'சூப்பர் ஹிட்' பட்டியலில் சேருமா ? | 'ஏழு கடல் ஏழு மலை' படத்திற்கு முன்பாக ராமின் 'பறந்து போ' ரிலீஸ் | பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம் வசூலித்த 'டூரிஸ்ட் பேமிலி' |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 5 மாதமாக ஒளிபரப்பாகி வந்த நடன நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ் இரண்டாவது சீசன். இந்த நிகழ்ச்சியில் 12 ஜோடிகள் கலந்து கொண்டு தங்கள் நடனத் திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர். இவர்களில் இருந்து இறுதிப்போட்டிக்கு 5 ஜோடிகள் தேர்வு பெற்றனர். காளி-மேக்னா வின்செண்ட், அவினாஷ்-மேக்னா, தேவா-தேசிகா, ரித்து-ரினிஷ்ராஜ், கிருஷ்ணமூர்த்தி-ரவீனா ஆகியோர் அந்த 5 ஜோடிகள் ஆவார்கள்.
இப்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்துக்கு வந்திருக்கிறது. இதன் இறுதி போட்டிகள் நாளை மாலை சென்னை புறநகரில் உள்ள ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கில் நடக்கிறது. இறுதிச் சுற்று போட்டியாளர்களுக்கு பல்வேறு சுற்று போட்டிகள் நடத்துப்பட்டு சேம்பியன் ஜோடி தேர்ந்தெடுக்கப்படுகிறது. நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகைகள் கவுதமி, சினேகா, பிரியாமணி ஆகியோர் பணியாற்றுகிறார்கள். நிகழ்ச்சியை தீபக் தினகர், அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார்கள். நாளை மாலை 6.30 மணியிலிருந்து இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.