ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி. கடந்த ஒரு ஆண்டாக ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தான் இந்த ஆண்டு சிறந்த சீரியலுக்கான விஜய் அவார்டையும் பெற்றது.
இந்த நிலையில் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்த பவித்ராவும், வினோதினி என்கிற முக்கியமான கேரக்டரில் நடித்து வந்த வைஷாலியும் விலகியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இரு நடிகைகள் விலகி இருப்பது ராஜா ராணி சீரியல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வைஷாலிக்கு உடல்நல பிரச்சினை இல்லை என்றும், அவர் 3 மாதம் கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என்ற டாக்டர்கள் கூறியதால் அவர் விலகியதாக கூறப்படுகிறது. பவித்ரா இதே சேனலில் ஒளிபரப்பாகும் இன்னொரு சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது.
இருவர் விலகினாலும் அவர்கள் நடித்து வந்த கேடக்டர்கள் தொடர்கிறது. இவர்களுக்கு பதிலாக வேறு நடிகைகள் நடிப்பார்கள் என்கிறது சீரியல் தரப்பு. வைஷாலி, பவித்ரா இடத்தை புதியவர்கள் நிரப்புவார்களா? என்பது போகப் போகத்தான் தெரியும்.




