மலைவாழ் மக்களின் கல்வியை வலியுறுத்தும் 'நறுவீ' | பிரபல டிசைனர் குமார் காலமானார் | ‛கூலி, வார் 2' ஜெயிப்பது யார்? | கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? | ‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம் | திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு உதயநிதி, இபிஎஸ், பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? |
கோலங்கள் என்ற சின்னத்திரை நெடுந்தொடர் மூலம் பிரபலம் ஆனவர் டைரக்டர் திருச்செல்வம். அவர் தற்போது புதிதாக பொக்கிஷம் என்ற பெயரில் புதிய தொடரை இயக்குவதுடன், அந்த தொடரை தயாரிக்கவும் செய்கிறார். திருச்செல்வம் தியேட்டர்ஸ் என்ற பேனரில் அவர் தயாரிக்கும் இந்த தொடர் கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
இந்த தொடர் குறித்து திருச்செல்வம் அளித்துள்ள பேட்டியில், உறவுகளே வாழ்க்கை என வாழுகிறான் வசந்தன். உறவுகளால் ஏமாற்றப்பட்டு தனித்து வாழ பழகிக் கொண்டவள் கண்மணி. எதிரெதிர் புள்ளிகளில் இருக்கும் இவர்கள், விதி வசத்தால் வாழ்க்கையில் இணைகிறார்கள். எல்லா விஷயங்களிலும் ஒருமித்த கருத்துடன் இருக்கும் இவர்களுக்கு உறவுக்காரர்கள் தான் பிரச்னையாகிறார்கள். அம்மா, இரண்டு அக்காக்கள், அவர்களது கணவர்கள், குழந்தைகள், ஒரு தங்கை என, தான் நேசிக்கும் தன் கூட்டுக்குடும்பத்தை மனைவியும் நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் வசந்தன். அவர்களோடு ஒட்டவே முடியாமல் தவிக்கிறாள், கண்மணி.
கண்மணியின் தோழி யமுனா. கணவனைப் பிரிந்து தனது டீன்ஏஜ் மகனோடு வாழும் யமுனா, இந்த சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் கதையின் இன்னொரு பக்கம். இவர்கள் தவிர, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளும் அர்ஜுன்-மாயா, பத்திரிகை உலகில் சாதிக்கத் துடிக்கும் கண்மணியின் தங்கை நந்தினி, திருமணம் செய்து கொள்ளாமல் கடற்கரையில் ஒரு குடிசையில் வாழும் வசந்தனின் சித்தப்பா... இப்படி பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் இந்த தொடரில் வரவிருக்கிறார்கள். வழக்கமான சீரியல் பாணியில் இருந்து விடுபட்டு இன்றைய பெண்கள் சந்திக்கும் யதார்த்தமான பிரச்சினைகளை இந்த தொடர்அணுகப்போகிறது. அன்பு, கோபம், சோகத்திற்கு இணையாக நகைச்சுவையும் இந்த பொக்கிஷத்தில் உண்டு, என்று கூறியுள்ளார்.