அடுத்து வர இருக்கும் படங்களில் ‛மதராஸி' மட்டுமே டாப் | மீண்டும் இணைந்து நடிக்கப் போகும் ரஜினி, கமல்? | நான்கு நாளில் ரூ.404 கோடி வசூலைக் கடந்த கூலி | பிளாஷ்பேக்: வித்தியாசமான சிந்தனையோடு 'வீணை' எஸ் பாலசந்தர் தந்த விளையாட்டு “பொம்மை” | இன்ஸ்டாவில் பின்தொடரும் ஏ.ஆர்.ரஹ்மான் ; மகிழ்ச்சியில் மஞ்சும்மேல் பாய்ஸ் இசையமைப்பாளர் | 25 நாட்களைக் கடந்த 'தலைவன் தலைவி' | மாயமான கப்பலின் மர்மத்தை படமாக இயக்கும் ‛2018' பட இயக்குனர் | ஜூலையில் 1400 கோடி வசூல் கடந்த இந்திய சினிமா | மோதிரக் கையால் குட்டுப்பட்டு கதாநாயகியாக அறிமுகமாகும் மகேஷ்பாபுவின் சகோதரர் மகள் | ‛தி ராஜா சாப்' பட சம்பள பாக்கி விவகாரம் ; தயாரிப்பாளர் விளக்கம் |
அம்புலி 3டி படத்தின் மூலம் அறிமுகமானவர் பெங்களூர் பொண்ணு ஷனம் ஷெட்டி. அதன்பிறகு கதம் கதம், கவலை வேண்டாம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, சதுரம் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது 23, டிக்கெட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் ஏராளமான மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
பெரிய திரை நடிகையான ஷனம் ஷெட்டி, தற்போது சின்னத்திரைக்கு சென்றிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சியில் பங்கெடுத்து வருகிறார். இதில் கலந்து கொள்ளும் 12 பெண்களில் ஒருவராக ஷனம் ஷெட்டி பங்கேற்றுள்ளார்.