சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

விஜய் தொலைக்காட்சியில் வருகிற 26ந் தேதி முதல் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
வெவ்வேறு குணாதிசயங்களை கொண்ட அண்ணன், தம்பிகள். வெவ்வேறு குணாதிசயங்களை கொண்ட பெண்களை மணந்து ஒரே வீட்டில் வாழும்போது வரும் பிரச்னைகளை காமெடியாக சொல்லப்போகிற தொடர்.
தேடிச் சென்று வம்பிழுத்து, பெண்களை கிண்டல் செய்து ஜாலியாக வாழ்கிறவர் மாயன். தேடிப்போய் மற்றவர்களுக்கு உதவி செய்கிற டாக்டர் அரவிந்த். மாயன் மனைவியாக அடக்கமே உருவான அப்பாவி பெண் தாமரையும், டாக்டர் அரவிந்துக்கு அடாவடி பெண் தேவியும் மனைவியாக அமைகிறார்கள். அவர்களுக்கு நடக்கும் பிரச்சினைகள்தான் கதை.
மாயன், அரவிந்த் இரண்டு கேரக்டர்களிலும் சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை புகழ் செந்தில் நடிக்கிறார். முற்றிலும் மாறுபட்ட தொடராக ஒளிபரப்பாக இருக்கிறது.