தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் |
தெலுங்கு படங்களில் வில்லி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறவர் சனா. தமிழில் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்தார். வஜ்ரம் என்ற படத்தில் கொடூர வில்லியாக நடித்தார். இன்னும் சில படங்களிலும் நடித்தார். தமிழில் குறைவாக நடித்திருந்தாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 500 படங்கள் வரை நடித்திருக்கிறார். தற்போது சனா சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
விரைவில் விஜய் டி.வியில் ஒளிபரப்பாக உள்ள ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் சனா. இதற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டு தற்போது நடித்து வருகிறார். சின்னத்திரை சீரியலில் நடிப்பது பற்றி சனா கூறியதாவது:
நிறைய படங்களில் நான் நடித்திருந்தாலும் சின்னத்திரையில் நடித்தால் இன்னும் பல மக்களுக்கு சென்று சேரலாம் என்று நண்பர்கள் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். எனக்கும் அது சரி என்று பட்டது. சீரியல் கதை கேட்டேன். 20 கதைகள் வரை கேட்டு கடைசியாக முடிவு செய்தது தான் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி. கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தன் குடும்பத்தின் நலனுக்காக எதையும் செய்யத் துணிகிற ஒரு பெண் கேரக்டரில் நடிக்கிறேன். மற்றவர்களுக்கு நான் செய்வது வில்லித்தனமாக தெரியலாம். ஆனால் எனக்கு அதுதான் நியாயமாக இருக்கும். இப்படியான பவர்புல் கேரக்டர் அது. சின்னத்திரையில் நடிக்க தொடங்கிவிட்டாலும் நல்ல வாய்ப்புகள் வந்தால் சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் சனா.