தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் கால் பதித்தவர் நீலிமா. அதை தொடர்ந்து நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், மொழி, பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா உட்பட 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் நுழைந்த அவர் வாணி ராணி, தாமரை, தலையனை பூக்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட தொலைகாட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
நடிகையாக இருந்த நீலிமா இப்போது தயாரிப்பாளராகியிருக்கிறார். தனது கணவர் இசைவாணனுடன் இணைந்து இசை பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் தற்போது ஜீ தமிழ் தொலைகாட்சிக்காக "நிறம் மாறாத பூக்கள்" என்ற தொடரை தயாரிக்கிறது. முரளி, நிஷ்மா, அஸ்மிதா மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கவுதமி ரவி, டேவிட் ராஜ், தாரிஷ், நேகா, ஸ்ரீநிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இன்று இதன் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
"எனது 20 வருட கனவு இது. நானும் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற கனவு இன்று நிஜமாகி இருக்கிறது. சின்னத்திரையில் முதன்முறையாக தயாரிப்பாளராக கால் பதித்திருக்கிற நானும் என் கணவரும் பெரிய திரையிலும் தயாரிப்பாளராக கால் பதிக்க இருக்கிறோம்" என்கிறார் நீலிமா.