தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
தேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தவர் நீலிமா. அதை தொடர்ந்து நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமண்யம், மொழி பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா உட்பட 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அத்துடன் வாணி ராணி, தாமரை, தலையனை பூக்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட தொலைகாட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
தனது 20 வருட கலைப்பயணத்தின் தொடர்ச்சியாகவும் தனது அடுத்த கட்ட முயற்சியாகவும் இசை பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் ஜீ தமிழ் தொலைகாட்சிக்காக தயாரிக்கும் நெடுந்தொடர் "நிறம் மாறாத பூக்கள்". முரளி, நிஷ்மா, அஸ்மிதா மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கெளதமி ரவி டேவிட் ராஜ், தாரிஷ், நேகா, ஸ்ரீநிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இனியன் தினேஷ் இயக்கும் இந்த தொடரை இசைவாணன் மற்றம் நீலிமா இணைந்து தயாரிக்க உள்ளனர். வரும் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 மணிக்கு இந்த தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. மும்முனை காதல் கதையாக நிறம் மாறாத பூக்கள் உருவாகிறது. படப்பிடிப்பு நாகர்கோவில் முட்டம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது.
எனது 20 வருட கனவு இது. நானும் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற கனவு இன்று நிஜமாகி இருக்கிறது. சின்னத்திரையில் முதன்முறையாக தயாரிப்பாளராக கால் பதித்திருக்கிற நானும் என் கணவரும் பெரிய திரையிலும் தயாரிப்பாளராக கால் பதிக்க இருக்கிறோம் என்கிறார்கள் இசைவாணன் - நீலிமா இசைவாணன் இருவரும்.