ரிஷப் ஷெட்டியைப் பாராட்டிய ஜூனியர் என்டிஆர் | முதல் வருட நிறைவு தினத்தில் 'தேவரா' படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 50 வயதில் விஜய் பட ஹீரோயினின் திருமண ஆசை | பிகினி உடை சர்ச்சை ; சாய்பல்லவி வெளியிட்ட விளக்க வீடியோ | அவதூறு கருத்துக்களை பரப்பவர்களுக்கு மகிமா நம்பியார் இறுதி எச்சரிக்கை | 'ஓஜி' தயாரிப்பாளர் மீது அவமதிப்பு வழக்கு தொடர போகிறேன் ; வழக்கறிஞர் ஆவேசம் | கரூர் மாநாடு சம்பவத்தை நான் விமர்சிக்கவில்லை ; 'டிராகன்' நாயகி விளக்கம் | ஸ்பெயினிலும் சாதித்த அஜித் அணி: 3ம் இடம் பிடித்து அசத்தல் | அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன்- 9 ஆரம்பம்! | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது! |
சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளை துவக்கி வைத்ததே விஜய் டி.வி. தான். இப்போது எல்லா சேனல்களும் ஏதோ ஒரு விதத்தில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதனால் விஜய் டி.வி நடன நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்த ஆரம்பித்திருக்கிறது.
வருகிற 7ந் தேதி முதல் கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு பிரமாண்ட செட்டுகளில் பிரமாண்ட நடன கலைஞர்களை கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. தற்போது இதன் படப்பிடிப்புகள் பிரமாண்ட அரங்கில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகரும், நடன இயக்குனருமான ராஜு சுந்தரம் நடத்துகிறார்.
இந்த நடன நிகழ்ச்சியில் உயிரை பணயம் வைத்தும் நடனமாடுகிறார்களாம். இதுவரை ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் இதுவே பிரமாண்டமாக இருக்கும் என்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.