அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? |
ஒரு காலத்தில் சின்னத்திரையில் நட்சத்திரமாக கலக்கியவர் பிரஜின். பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, காதலிக்க நேரமில்லை தொடர்களில் நடித்தார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அவ்வப்போது சிறிய கேரக்டர்களில் சினிமாவில் நடித்து வந்த பிரஜின் தீ குளிக்கும் பச்சை மரம் என்ற படத்தின் மூலம் ஹீரோவானார். அதன் பிறகு மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை படங்களில் நடித்தார். இந்த படங்கள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. சுமார் 10 வருடங்கள் சினிமாவில் போராடி விட்டு இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி இருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் வருகிற அக்டோர் 2ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் சின்னத்தம்பி தொடரில் நாயகனும், சின்னத் தம்பியும் அவர்தான். ஜல்லிக்கட்டை மையமாக கொண்ட கிராமத்து கதை. ஜல்லிக்கட்டு மாட்டை அடக்கும் சின்னத்தம்பி, பட்டணத்தில் இருந்து ஊருக்கு வரும் ஒரு திமிரான பெண்ணை எப்படி அடக்குகிறான் என்பதுதான் கதை. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.