சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
துணிச்சலான, புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் விஜய் டி.வி என்றைக்குமே முன்னணியில் இருக்கிறது. அந்த வரிசையில் அடுத்து அறிமுகப்படுத்துகிறது திரிலிங்கான யெஸ் ஆர் நோ என்கிற கேம் ஷோவை.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர் ஒரு காரியத்தை செய்வார். பார்வையாளர்களாக இருக்கிறவர்கள் அவர் அதை செய்வாரா மாட்டாரா என்பதை யெஸ் ஆர் நோ சொல்லி தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக ஒரு சிறுமியின் தலையில் ஆப்பிளை வைத்து அதனை தூரத்திலிருந்து ஒருவர் அம்பால் அந்த ஆப்பிளை உடைப்பார் என்பது போட்டி. இது அவரால் முடியுமா முடியாதா என்பது எஸ் ஆர் நோவுக்கான விஷயம். இப்படி 128 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அவர்களிலிருந்து ஒருவர் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு பெருந் தொகை பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி நாளை (23ந் தேதி) தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதனை பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் மற்றும் சினிமா நடிகர் ஜெகன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வாரமும் பல துறைகளில் சாதனை படைத்த நான்கு நட்சத்திர வீரர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.