மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா நடித்த படம் டோரா. சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கினார். மாயா படத்தின் வெற்றிக்கு பிறகு அதே பாணியிலான திகில் பேய் படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. அவருடன் தம்பி ராமய்யா, ஹரிஷ் உத்தமன், சுனில்குமார் ஆகியோரும் நடித்திருந்தனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். விவேக், மெர்வின் இசை அமைத்திருந்தனர்.
சிறுமியை பலவந்தப்படுத்திய ஒரு கொடூரமான கும்பலை, காருக்குள் புகுந்த நாயின் ஆவி ஒன்று நயன்தாரா மூலமாக பழிவாங்குவது தான் கதை. மாயா அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும், ஓரளவுக்கு ஓடிய படம். கடந்த மார்ச் மாதம் 31ந் தேதி வெளிவந்த இந்தப் படம் 5 மாதங்களுக்கு பிறகு சின்னத்திரையில் ஒளிபரப்பாகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வருகிற 17ந் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது.